ஐய்யப்ப பக்தர்கள் பயணித்த ஆம்னி சொகுசு பேருந்து விபத்து

16 November 2025

பெங்களூரில் இருந்து சபரிமலை செல்வதற்காக 60.பேர் கொண்ட ஐய்ப்ப பக்தர் குழுவினர் ஒரு தணியார் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர் இந்தப் பேருந்து 16-11-2025-அன்று காலை கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பெருமாநல்லூர் நீயூ திருப்பூர் அருகே வந்துபோது 


முன்னால் கர்நாடகவில் இருந்து மக்காச் சோளம் ஏற்றிக் கொண்டு கோவை சென்று கொண்டுருந்த லாரியின் பின்பக்கம் மோதியது இதில் ஓட்டுநர் உட்பட 10.க்கும் மேற்பட்ட ஐய்யப்ப பக்தர்கள்.காயம் அடைந்தனர். 
அவ்வழியே வந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் காயங்க ளோடு அவதிப்பட்டுக் கொண்டுருந் தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்து மனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் சிறிது போக்குவரத்து பாதிக்கப் பட்டது 

சம்பவத்தை அறிந்து வந்த போலிசார் விபத்துக் உள்ளான சொகுசு பஸ்ஸை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தனர் சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரனை மேற்கொ ண்ட போலிசார்,
ஓட்டுனரின் தூக்க கலக்கதால் இந்த விபத்து நேரிட்டதாக கண்டறிந்துள்ளனர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.