வில்வ இலையின் மருத்துவ குணங்கள்

11 November 2025

வில்வ இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும். வில்வ இலை பல்வேறு நோய்களை தடுக்கும் ஒரு மருத்துவ தாவரமாக விளங்கி வருகிறது. இந்த வில்வ இலை காய்ச்சல் அனிமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. மேலும் காலரா தடுப்பு மருந்தாகவும் இது செயல்படுகிறது இதனால் தான் இந்த வில்வ இலையை கோவில்களில் சிவபெருமானுக்கு மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர்.