தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி

24 November 2025

இதோ நீங்கள் பார்ப்பது விழுப்புரம் மாவட்டம் கண்டச்சிபுரம் வட்டம் வி.புத்தூர் புதிய நகரில் உள்ள தெருக்களின் அவலநிலை..
இங்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி தலைவராக அன்னபூரணி சிவராஜ் பதவியேற்றார்,, அதிலிருந்து இதுநாள் வரைக்கும் எந்த ஒரு நலத்திட்டங்களும் எங்க மக்களுக்கு செய்யவில்லை நாங்கள் எத்தனையோ முறை நேரில் அணுகியும் குறைகளை  கூறினோம். இதுநாள் வரை எந்த பயனும் இல்லை என்பதே இந்த ஊர் மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இந்த 4.5 வருடங்களில் பஞ்சாயத்து தலைவரையே இந்த ஊர் மக்கள் பார்த்ததில்ல தலைவர் ஊரில் இல்லாமலே ஆட்சி செய்தது இவரே ஆவார். இங்கு மழை காலங்களில் வெளியேறுவதற்கு  வழியே இல்லாத நிலை கடந்த 20 வருடமாக இருந்து வருகிறது. தெருக்களின் அவலநிலை,குடிதண்ணீர் பைப், கால்வாய் தண்ணீரோடு கலந்து வருகிறது. இதேபோன்று ஊரிலுள்ள சாக்கடை தண்ணீர் வெளியே போவதற்கு வழியே இல்லாத அவலநிலை  இன்றைக்கும் தொடர்கதையாகவே இருக்கிறது. எனவே ஊராட்சியை சார்ந்த அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இந்த மக்களின் கோரிக்கைகளை சரி செய்வார்களா ???????????????????
எதிர்பார்ப்புகளோடு வி.புத்தூர் பொதுமக்கள் 🙏🙏🙏🙏🙏

---PS Parthi