புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்திய நபரை கைது செய்தது விழுப்புரம் போலீஸ்
25 November 2025
விழுப்புரம் மாவட்ட காவல்துறை
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு
நூதன முறையில் தனது இரு குழந்தைகளையும் பள்ளி சீருடையில் இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து பள்ளிக்கு செல்வது போல் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மது பானம் எடுத்து வந்தவர் கைது _316 பாட்டில் பறிமுதல்
_____
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில்
மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில்
கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடி அருகே ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் தனது இரு குழந்தைகளுடன் பள்ளி சீருடையுடன் அமர வைத்து போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படாது வண்ணம் வந்த நபரை பிடித்து சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து
எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் நந்தனார் தெருவில் வசிக்கும் செல்வகுமார் என்பவரின் மகன் பரத் என்கிற பர்வீன் வயது 30 என தெரிய வந்தது
மேலும் எதிரிடமிருந்து 180 ml அளவு கொண்ட 124 மது பாட்டில்களும், 90 ml அளவு கொண்ட 192 பாட்டில்களும் மொத்தம் 316 மதுபான பாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
---PS Parthi