மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிக் கடத்தி சென்று பாலியல் வன்புணர்ச்சி

27 November 2025

மேல்மலையனூர் காவல் நிலையம்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் எதிரிக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.
வழக்கின் விபரம்:
 பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி இரண்டு வயது பெண் உள்ள நிலையில் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால்   மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று  பாதிக்கப்பட்ட பெண்ணை இரு குடும்பத்தினர்களும் கடந்த 29 .01.2025  ஆம் தேதி மாலை  அழைத்து வந்து இரவு பூஜை பரிகாரம் செய்து  முடித்துவிட்டு  அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது அம்மா உ டன் கோவிலில் தங்கவைத்து தங்கள் ஊருக்கு சென்று உள்ளனர். இருவரும் மேல்மலையனூர் திருக்கோவில் மேற்கு வாசல் அருகில் உள்ள பக்தர்கள் தங்கும் இடத்தில் தங்கி இருந்த நிலையில் 30.01.25 தேதி மதியம் தாய்  கோயிலுக்கு வெளியே உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று விட்டு சாப்பாடு வாங்கி வருவதற்காக பெண்ணை தனியே விட்டு சென்ற போது எதிரி குமார் என்பவர்  பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வந்து பேச்சு கொடுத்து தன்னுடன் அழைத்து சென்றும் திருவண்ணாமலையில் பெண் கழுத்தில் போட்டிருந்த தாலியை  விற்றும் அப்பெண்ணிற்கு சாமியார் வேடமிட்டு ரயில் மூலம் 19 நாட்கள்  சென்னை, டெல்லி, ஹரித்துவார்‌,
திருப்பதி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அழைத்து சென்று எதிரி பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை கட்டாயப் படுத்தி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்து குற்றம் புரிந்துள்ளார்.
 தீர்ப்பின் விபரம்:
குற்றம் சாட்டப்பட்டவர்  குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. 
ஒரு பிரிவின் படி 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் மற்றும் தவறினால் 1 வருடம் கடுமையான சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 மற்றொரு பிரிவின் படி10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  
மேலும் ஒரு பிரிவின்படி  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
...


--PS Parthi