டிட்வா புயலின் காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதலே மிக கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு முதல் நகர ஆரம்பித்தது அதனால் நேற்று இரவு முதலே சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 3.12.2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- - PS Parthi