போதை பொருள் கடத்தியவர் மூவர் கைது, அரகண்டநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
12 December 2025
விழுப்புரம் மாவட்ட காவல்துறை
அரகண்டநல்லூர் காவல் நிலையம்
பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் - மூவர் கைது
பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில்
அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.தேவரத்தினம், திரு.லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் குடமுரட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
உளுந்தூர்பேட்டை தாலுகா சதீஷ் 40, மடப்பட்டு மெயின் ரோட்டில் வசிக்கும் சக்தி தாசன் 21, கலைச்செல்வி 42 என தெரிய வந்தது
மேலும் எதிரிகளிடம் இருந்து சுமார் 150 கிலோ எடை கொண்ட Hans, விமல் பாக்கு, car 🚗_1 பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
---PS Parthi