ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

25 October 2025

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் இன்று (அக்.25) தமிழ் நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குருசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஒன்றிய மாவட்ட தலைவர் பூவழகன் ஆசிரியர் சங்கம் புஷ்பா சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.