மழையால் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

26 October 2025

விழுப்புரம்: மழையால் அடித்துச்செல்லப்பட்ட பாலம்


மேல்மலையனூர் வட்டம் கோவில்புறையூர் கிராமத்திலிருந்து கிளாக்குப்பம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்றிரவு (அக்.25) அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அக்கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.