விழுப்புரம் மாவட்டத்தில் மழை வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

23 October 2025


விழுப்புரம் மாவட்டத்தில் 10 செ.மீ., மழை : 10 வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

 விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 கூரை வீடுகள் சேதமாகின; 2 மாடுகள் இறந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியிலிருந்து பலத்த மழை கொட்டியது. காலை 8.00 மணி வரை இந்த மழை தொடர்ந்தது.

இதனால், வானுாரில் 18 செ.மீ, விழுப்புரம், வல்லத்தில் 17 செ.மீ, செஞ்சியில் 12 செ.மீ, நேமூரில் 10.5 செ.மீ, திண்டிவனம், சூரப்பட்டில் 10.3 செ.மீ, அளவில் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 10 செ.மீ., பதிவானது.