வேலூர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு: தவெக தலைமை அறிவிப்பு
22 February 2026
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (பிப்ரவரி 23, திங்கள்கிழமை) வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி (கொல்லமங்கலம்) பகுதியில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, கியூ ஆர் குறியீடு (QR Code) கொண்ட நுழைவுச் சீட்டு வைத்துள்ள 4,900 நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்புக் கருதி முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அனுமதிச் சீட்டு இல்லாத பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் கூட்ட இடத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் விஜய் கூட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
இந்த காணொளி வேலூரில் நடைபெறும் விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை வழங்கிய அனுமதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்குகிறது.