வேலூர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை விதித்துள்ள 20 அதிரடி நிபந்தனைகள்!

18 February 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தனது மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். இதற்காக 33 ஏக்கர் பரப்பளவிலான மைதானம் தயாராகி வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு. சிவராமன் பாதுகாப்பு கருதி 20 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, விஜய் சென்னையிலிருந்து சாலை வழியாக வரும்போது இளைஞர்கள் யாரும் அவரது வாகனத்தைப் பின்தொடரக் கூடாது என்றும், பாதுகாப்பு நலன் கருதி கூட்டத்திற்கு முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் காவல்துறை கேட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன. சேலத்தைத் தொடர்ந்து வேலூரில் நடைபெறும் இந்த சந்திப்பு, தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.