செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், திராவிடக் கட்சிகள் மீது தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவை 'தீய சக்தி' என்றும், முன்பு ஆட்சி செய்த அதிமுகவை 'ஊழல் சக்தி' என்றும் குறிப்பிட்ட அவர், இந்த இரு சக்திகளும் இனி தமிழகத்தை ஆளக்கூடாது என முழங்கினார்.
மேலும், அதிமுக நேரடியாகவும், திமுக மறைமுகமாகவும் பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் தனது கட்சி பணியாது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல, அது ஒரு 'மக்கநாயகப் போர்' என்றும் விவரித்தார். இதே கூட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' (Whistle) சின்னத்தையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி, ஊழலற்ற நேர்மையான அரசியலை முன்னெடுப்போம் என உறுதி அளித்தார்.