இன்று நடைபெறுகிறது தவெக நிர்வாக குழு கூட்டம்

29 October 2025

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பனையூர் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களது குடும்பத்தினருக்கு 1.85 கோடி நிதி உதவி வழங்கினார். இந்த நிலையில் தற்போது நடக்க உள்ள இந்த நிர்வாக குழு கூட்டத்தில் இதுபோன்ற கூட்ட நெரிசலை சமாளிப்பது மேலும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.