தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிக்கை

12 November 2025

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்பட போகும் அதிகாரம் மமதை கொண்ட கட்சி ஒன்று அவசர கதியில் தனக்கு பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. எந்த கட்சியை சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றை அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேற எந்த கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இப்போது எல்லாம் அந்த கட்சியின் ஒரே இலக்கு நம்மை தூற்றுவதே. தமிழக வெற்றி கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதை அதன் முழு நேர வேலை என்றாகி விட்டது என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று நடந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதை விட நம்மை திட்ட வைத்து அகமகிழ்ந்ததே நடந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.