விஜய் - த்ரிஷா திருமண வரவேற்பு வருகை

05 March 2026

சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 'லியோ' படத்திற்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து பொது நிகழ்ச்சிக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண மேடையில் மணமக்களை வாழ்த்திய அவர்கள், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் மீது தொடர்ந்து சர்ச்சைகள் எழும்பி வரும் நிலையில் இவர்கள் இருவரும் இவ்வாறு ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் ஒரு பேசும் பொருளாகியுள்ளது....