ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இதனை அடுத்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த பதிவில் எப்போதும் என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் எத்தனை அரசியல் கட்சிகள் எத்தனை ஆண்டு காலம் நம்மை ஆண்டு காலம வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்குரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும் ஏக்கத்திலேயே கனவுகளிலேயே காலங்கள் கடந்து விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இன்று மஞ்சள் மாநகர ஆன ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பு வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என தெரிவித்துள்ளார்....