வியட்நாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 28 400 க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் 32 லட்சம் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதனால் அரசுக்கு சுமார் 3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...