வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்க கடற்படை: ரஷ்யா கடும் கண்டனம்

08 January 2026

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தீவிரமாக கண்காணித்து தடுத்து நிறுத்தி வருகிறது.




ரஷ்யாவிற்குச் சொந்தமான 'பெல்லா 1' (Bella 1) என்ற எண்ணெய் டேங்கர் கப்பலை பறிமுதல் செய்ய அமெரிக்கா நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, ரஷ்யா அந்தக் கப்பலின் பெயரை 'மரினோரா' (Marinora) என மாற்றி, தனது நாட்டுக்கொடியை ஏற்றி பாதுகாப்பு அளித்து வந்தது.



இந்த நிலையில் நேற்று வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த எண்ணெய் டேங்கர் கப்பலை, அமெரிக்க கடற்படை அதிரடியாகச் சுற்றி வளைத்து சிறைபிடித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.