விருதாச்சலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை அடிப்படையில் நிறுத்தம்

31 December 2025

வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூர் திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு நாளை முதல் சோதனை அடிப்படையில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் நிறுத்தம் அளிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது...