பண்ணாரி அருகே பாய்ந்த புலி உயிர் தப்பிய தம்பதி

06 November 2025

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகவனப்பகுதி உள்ளது இங்கு பல்வேறு வன உயிரினங்கள், வாழ்ந்து வருகின்றன. 

திம்பம் தேசிய நெடுஞ்சாலையான இவ்வழியே மைசூர் போன்ற பகுதிகளுக்கு பல்வேறு வாகனங் கள் சென்று வருகின்றன. மேலும் இவ்வழியே வனவிலங்குகளைப்  பார்த்துக் கொண்டே பயனிப்பது பலருக்கும் திரிலான அனுபவம் ஆகும். இதனால் அவ்வழியே  வனவிலங்குகளை பார்த்தவாறே பயணிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றாலப் பயணிகள்  பலரும் வந்து போகின்றனர்.   

இந்நிலையில் 4-11-2025.அன்று  திம்பத்தில் இருந்து சத்திய மங்கலத்திற்கு ஒரு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது பண்ணாரி அருகே பதுங்கியிருந்த புலி ஒன்று அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது. இதைப்பார்த்த தம்பதியினர் அச்சத்தில் அலறினார்கள். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு புலி அவர்களை தாக்கமல் காட்டுக்குல் ஒடியது. பின்பு உறுமியபடி மீண்டும் ரோட்டுக்கு வந்தபுலி அங்கிருந்தவர்களை மிரட்டுவது போல் அச்சுறுத்திவிட்டு மீண்டும் வனத்திற்குள்  சென்றது. இதை அங்கு காரில் வந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பார்த்தவர்கள பலரும் பீதியில் பின்னோட்டம் வழங்கி வருகின்றனர். புலியிடம் இருந்து தம்பதிகள் தப்பிய செய்தியால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்
மா.ஜாபர் அலி திருப்பூர்.