உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து

24 November 2025

உத்தரகாண்ட் மாநிலம் தெகிரி மாவட்டம் நரேந்திர நகர் அருகே மலைப் பாங்கான சாலையில் ஒரு பேருந்து இன்று பயணித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாப்பில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஐந்து பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...