உத்திர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசின் பகுதியில் பேருந்து ஒன்று என்று சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற மீட்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்...