உத்திரபிரதேசத்தில் பனிமூட்டத்தின் காரணமாக விடுமுறை நீட்டிப்பு
02 January 2026
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகிறது.
பகல் நேரங்களிலும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிரேட்டர் நொய்டா, காசியாபாத், மற்றும் மதுரா போன்ற நகரங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
கடும் குளிரின் காரணமாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் (12-ம் வகுப்பு வரை) ஏற்கனவே ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
பள்ளிகள் ஜனவரி 2-ம் தேதி (இன்று) மீண்டும் திறக்கப்பட வேண்டிய நிலையில், குளிரின் தாக்கம் குறையாததால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, ஜனவரி 5-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்...