குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.. இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு கல்லூரிகளில் நாளை நவம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது...