உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 நாட்களில் 25 பேருக்கு அதிநவீன நுண் துளை கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து சாதனை

11 November 2025

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 நாட்களில் 25 பேருக்கு அதிநவீன நுண் துளை கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர் அதனை கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு நவீன கருவிகள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை 100 நாட்களில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 100 நாட்களில் அதிநவீன கருவியான லேப்ரோஸ்கோபிக் கருவிக்கொண்டு நுண்துளை அறுவை சிகிச்சைகள் இதுவரை 100 நாட்களில் 25 பேருக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர் 25 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததை ஒட்டி இன்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சித் தலைமையில் அவரது குழுவினர் அதனை கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் ரஞ்சித் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது வழக்கம் ஆனால் உளுந்தூர்பேட்டை தாலுகா தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து கேன்சர் கட்டிகள் அகற்றுவது அல்சர் நோய் காரணமாக குடலில் ஏற்பட்ட துண்டிப்புகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகள் லேப்ராஸ்கோப்பிக் கருவி மூலம் செய்து வருவதாகவும் இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்தவர்கள் நலமாக இருப்பதாகவும் கூறினார்.

இரா.வெங்கடேசன் சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்