பதக்கங்களை வென்றவர்களுக்கு காசோலை வழங்கிய துணை முதல்வர்

08 December 2025

தைவானின் தைபே நகரில் உள்ள நாங்காங் கண்காட்சி மையத்தில் நவம்பர் 27 முதல் 29 வரை ஆசிய உலகத்திறன் தைபே 2025 நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டிகளில் தமிழகம் 6 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தை பிடித்தது இந்த நிலையில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைத்து போட்டியாளர்களுக்கும் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்...