மடிக்கணினிகளை வழங்கிய துணை முதலமைச்சர்
08 January 2026
வட சென்னையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவிகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யும் பாரதி மகளிர் கல்லூரியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக
பிராட்வே, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரியில், 25.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்றடுக்குக் கட்டடம் கட்டப்பட்டது. இந்த "கலைஞர் நூற்றாண்டு கட்டடம்" அறிவியல் ஆய்வகங்கள், விசாலமான வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டடத்தை கடந்த 22.08.2024 அன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இன்று (8.1.2026), வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில், பாரதி மகளிர் கல்லூரியில் மற்றொரு புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 19.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நவீன "கல்வி அரங்கம்" கட்டுவதற்கான பணிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாணவிகளின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 20 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.