துணை மின் நிலையத்தை திறந்து வைத்த உதயநிதி

28 December 2025

சென்னை பிராட்வே டேவிட்சன் சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூபாய் 18. 24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன் மூலம் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 15,000 க்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்வினியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வடசென்னை வளர்ந்த சென்னையாக மாற்ற முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தற்போது இந்த துணை மின் நிலையம் திறப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்....