புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய்

23 December 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 

அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேற்கொள்ள கழக அமைப்பு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை கூடுதலாகப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தற்போது 8 மாவட்டங்களுக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்...


இந்த நிலையில் புதியதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள விஜய் புதிய நிர்வாகிகளுக்கு கட்சி தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.