தவெக பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி

05 November 2025

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பின்னர் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.