தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை மாமல்லபுரம் பகுதியில் நடைபெற உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின்பு ஒரு மாத காலம் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பணிகள் அமைதியாக இருந்த நிலையில் கட் கட்சியின் தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதை ஒட்டி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்..