தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அப்போதே நிகழ்ச்சியில் பேசிய விஜய் இது ஒரு அன்பான தருணம் அழகான தருணம் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு தாயன்பு கொண்ட மண். மேலும் உங்கள் தீபாவளி ரம்ஜான் கிறிஸ்மஸ் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் மண் என தெரிவித்த விஜய் சமூக சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100% உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார். மதச்சார்பற்ற சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் எனவும் தெரிவித்தார்...