மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்
08 March 2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. கட்சியின் தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த நேர்காணலை நடத்த உள்ளார். முன்னதாக, பிப்ரவரி 6 முதல் 20-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் இருந்து முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட உத்தேச வேட்பாளர்களை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். மார்ச் மாத மத்தியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள நிலையில், தவெக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே மண்டல வாரியாகச் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி வரும் விஜய், தற்போது வேட்பாளர் தேர்வில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.