ரெயில் நிலையத்தில் தவறவிட்ட 35 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளரின் நேர்மையான செயல்

30 January 2026

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 45 வயதான மீனாட்சி என்ற தூய்மைப் பணியாளர், நேற்று முன்தினம் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தபோது குப்பைத் தொட்டிக்குள் ஒரு மணிபர்ஸ் கிடப்பதைக் கண்டுள்ளார்.


அதில் இருந்த 35 பவுன் மதிப்பிலான தங்கச் சங்கிலி மற்றும் கம்மல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தனது சுகாதார அதிகாரி மூலமாக ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் அந்த நகைகளை ஒப்படைத்தார்.


விசாரணையில் அந்த நகைகள் சென்னையில் ஒயர்மேனாக வேலை பார்க்கும் கண்ணன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்ததையடுத்து, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த அவரிடம் அந்த நகைகள் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. ஏழ்மை நிலையிலும் சுமார் 35 பவுன் நகையைத் தவறான எண்ணமின்றிப் பத்திரமாக ஒப்படைத்த மீனாட்சியின் நேர்மையைப் பாராட்டி, ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.