கிரீன்லாந்தை மீட்டதே அமெரிக்காதான்; டென்மார்க் நன்றி கெட்டவர்களாக உள்ளனர் - டிரம்ப் ஆவேசம்

22 January 2026

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக டென்மார்க் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியிடம் வெறும் 6 மணி நேரத்தில் வீழ்ந்த டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியவில்லை என்றும், அமெரிக்கப் படைகள் பெரும் பொருட்செலவில் போராடி மீட்டெடுத்த பின்னரே அது மீண்டும் டென்மார்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரஷியா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாக்கவும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் கிரீன்லாந்து அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், அதை விற்க மறுக்கும் டென்மார்க்கை "நன்றி கெட்டவர்கள்" என்று சாடினார்.

தாங்கள் இல்லையென்றால் இன்று பல நாடுகள் ஜெர்மன் அல்லது ஜப்பானிய மொழியைப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும், கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் மீண்டும் கொடுத்தது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அவர் தனது பேச்சில் ஆவேசமாகத் தெரிவித்தார்.