ஒரு நாட்டுத் தலைவரின் வசிப்பிடத்தை தாக்குவது தவறு: டிரம்ப்

30 December 2025

ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிர்த்தியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று பேசிய ட்ரம்ப் தான் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் இந்த தாக்குதல் குறித்து தெரிவித்ததாகவும் தெரிவித்தார். அப்போது தான் மிகவும் கோபம் அடந்ததாக தெரிவித்தார் . மேலும் ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தை தாக்குவது தவறு என தெரிவித்த ட்ரம்ப் இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல என தெரிவித்தார். மேலும் உக்கிரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு சில மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்....