டிரம்ப் ஆட்சியின் ஓராண்டு சாதனைகள்: 365 நாட்களில் 365 வெற்றிகள்

21 January 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, "365 நாட்களில் 365 வெற்றிகள்" என்ற தலைப்பில் தனது சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஓராண்டில் சுமார் 8 போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணுஆயுதப் போர் அபாயத்தைத் தவிர்த்ததன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதற்காகத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், காசா அமைதி வாரியத்தை உருவாக்கியது, சட்டவிரோதக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியது, பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பு மற்றும் விசா கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் உலகையே அமெரிக்காவின் பக்கம் திரும்பச் செய்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.


குழப்பமான உலகச் சூழலை மாற்றி, அமெரிக்காவைச் சிறந்த பாதையில் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.