சீன அதிபரை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

30 October 2025

ஐந்து நாட்கள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது தென் கொரியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நாளை அங்கு நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதில் பல்வேறு வரி விதிப்பு மற்றும் ஏற்றுமதிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்ப் இடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த சந்திப்பு என்பது இரு நாடுகளுக்கும் உள்ள பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.