தென் ஆப்பிரிக்காவில் லாரி-வேன் நேருக்குநேர் மோதி 11 பேர் பலி

30 January 2026

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மினிவேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற காரில் மோதியதுடன் எதிரே வந்த லாரி மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.


குவாசுலு-நடால் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


லாரி தவறான ஒருவழிப்பாதையில் சென்றதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்த வாரம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த விபத்தில் 14 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அதே போன்ற மற்றொரு விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.