சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் பகுதியில் உள்ள லுயோ யங்ஜன் ரயில் நிலையம் அருகே இன்று காலை ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது அந்த வலியே வந்த சோதனை ரயில் ஒன்று வேகமாக வந்ததில் பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதியது. கோர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்... இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...