விழுப்புரம்: போக்குவரத்தை சீர்செய்த போலீசார்
24 October 2025
விழுப்புரம்: போக்குவரத்தை சீர்செய்த போலீசார்
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவை எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் எதிர் திசையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல போலீசார் இன்று முதல் தடை விதித்துள்ளனர்.
மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.