தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை அறிவிப்பு

22 December 2025

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல  கீழடுக்க சுழற்சி இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வருகிறது. 

நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....