தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...