தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதற்கான 3935 காலி பணியிடங்களை நிரப்பு இந்த தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 11.48 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வு எழுதியவர்கள் https://TNPSC.gov.in/என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்கள் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து தேர்வானவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து சரிபார்ப்பு நடைபெற்று கலந்தாய்வும் நடைபெற்று பணி நியமனம் செய்யப்படுவார்கள்.