மார்ச் 15-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள்

09 February 2026

தொழில்நுட்பக் காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கான நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், தேர்வர்கள் தங்களது ஓடிஆர் (OTR) எண் மூலம் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த இந்தத் தேர்வின் போது, சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் விடுபட்டதால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் போராட்டங்கள் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மறுதேர்வு மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 828 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.