த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவரின் மகன்
21 February 2026
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று சனிக்கிழமை தவெகவில் இணைந்தார். லோகேஷ் தமிழ்ச்செல்வன் இதற்கு முன்பு அதிமுகவின் அவிநாசி தொகுதி ஐடி விங் பொறுப்பாளராகவும், கடந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதி வேட்பாளராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் இளைய மகள் எழில் கேத்தரினும் இன்று கட்சியில் இணைந்தார்.