தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் ஆறு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை மற்றும் விதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.