தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இந்த புயலுக்கு டிட்டுவா என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயலால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள் காவிரி டெல்டா மாவட்டங்கள் வடக்க கடலோர மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது நவம்பர் 30ஆம் தேதி காலை வரை தனது தீவிர தன்மையை தக்க வைத்து மதியத்துக்குள் கடலிலேயே வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....