கள்ளக்குறிச்சியில் டிட்வா புயல் எதிர்கொள்ள முன்னே எச்சரிக்கை நடவடிக்கை

28 November 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக 29 .11. 2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் பேரிடர் காலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அனைத்து துறை அலுவலர்களை உள்ளடக்கிய அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அவசரகால கட்டணமில்லா  தொலைபேசி எண் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 041512288 01 என்ற தொலைபேசி எண்ணிற்கும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும் சுழற்சி முறையில்  பணியில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.




--PS Parthi